*நண்பர்கள்*
“கடவுளும்
சாத்தானும்
சந்தித்துக்கொண்ட ஒரு மாலை
வேளை
கடவுள் கையில் பால் டம்ளர்
சாத்தானிடம் சாராய பாட்டில்
ஆரம்பித்தது சாத்தான்
“என்ன சாமி...எப்படி இருக்கீங்க...
எங்கப் பாத்தாலும் உங்க
பேருதான்...
திருப்பதி, திருத்தணி, பழநின்னு வசூலை
அள்ளிக்கொட்றீங்களே...”
“அட போப்பா...”
அலுத்துக்கொண்டார் கடவுள்,
“என்ன இருந்தாலும்
டாஸ்மாக் வருமானத்துக்கு
ஈடாகுமா நம்ப வருமானம்…”
சாத்தான் விடுவதாயில்லை
“என்ன குருவே...அப்படிச் சொல்லிட்டீங்க...
தேர், திருவிழா, தெப்பம்னு உங்களுக்குத்தானே
எல்லாக் கொண்டாட்டமும்...”
“நீதானே மெச்சிக்கணும்…எந்தப் பேப்பரை பாரு...
உன்னோட ராஜ்ஜியம்தான்...
கள்ளக்காதல், கற்பழிப்பு,
கொலை, குண்டுவெடிப்புன்னு
பூந்து விளையாடுறியே தம்பி...”
சாத்தானுக்குக் கூச்சமாகப்
போய்விட்டது
அதற்குள்
பாலை காலி
செய்துவிட்டிருந்தார் கடவுள்
“என்ன பிரதர்...அதுக்குள்ள முடிச்சிட்டீங்க...
வேணும்னா இதைக் கொஞ்சம்
டேஸ்ட்
பண்ணிப் பாக்கறீங்களா..?”
“ஒன்னும் பண்ணாதில்ல...ஒன்னும்
பண்ணாதுன்னா கொஞ்சூண்டு ஊத்து
பாப்போம்..!”
*தவசி*
Different thought.
ReplyDeleteசாராய அவலம். நாசுக்கான விமர்சனம்.அருமை
ReplyDeleteகவிதை அருமை.
ReplyDeleteகவிஞருக்கு பாராட்டுகள்.
மிக அருமை.
ReplyDeleteஅழுது கொண்டே சிரிக்கிறேன்.
ReplyDelete