எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 25 February 2024

படித்ததில் பிடித்தவை (“வண்ணத்துப்பூச்சியைப் பிடிப்பதற்கு..!” – கல்யாண்ஜி கவிதை)

 

*வண்ணத்துப்பூச்சியைப் பிடிப்பதற்கு*

 

வண்ணத்துப்பூச்சியின்

பின்னாலேயே அலைவது

பிடிப்பதற்காக அல்ல

பிடிப்பது போன்ற

விளையாட்டுக்காக..!

 

*கல்யாண்ஜி*



Saturday 24 February 2024

படித்ததில் பிடித்தவை (“எவ்வளவு நன்றாக இருக்கும்..!” – கல்யாண்ஜி கவிதை)

 


*எவ்வளவு நன்றாக இருக்கும்..!*

 

உங்களுக்குச் சேர வேண்டியதை               

என்னிடமும்,

எனக்குச் சேர வேண்டியதை

அவர்களிடமும்,

அவர்களுக்குரியதை

இவளிடமுமாக மாற்றி மாற்றிக் கொடுத்துக்

கொண்டே செல்கிற

இந்த வாழ்க்கையில்

அவரவர்களுக்குரியதை

அவரவர்களிடம் சேர்த்து விட முடிந்தால்

எவ்வளவு நன்றாக இருக்கும்..!

 

*கல்யாண்ஜி*