எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday, 17 June 2021

படித்ததில் பிடித்தவை (“பொய்” – கவிதை)

 


*பொய்*

 

சில நேரங்களில்

பொய்

நம்மை காப்பாற்றுகிறது.

நன்றிக் கடனாக

நாம்

பொய்யைக் காப்பாற்ற

வேண்டியதாயிருக்கிறது..!


4 comments:

  1. நந்தகுமார்17 June 2021 at 06:43

    ஆம், உண்மை பேசுவதை
    ஞாபகம் வைத்துக்கொள்ள
    வேண்டியதில்லை.
    ஆனால் பொய் சொல்வதை
    ஞாபகம் வைத்துக்கொள்ள
    வேண்டிய கட்டாயத்திற்கு
    ஆளாகின்றோம்.

    ReplyDelete
  2. பொய் - உறுத்தல் என்றென்றும்

    ReplyDelete
  3. ஸ்ரீராம்17 June 2021 at 10:40

    மிக உண்மை.
    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  4. யாரும் நம் தின வாழ்க்கையில் உள்ள 'டாப் 10' பொய்களைச் சேகரித்ததாகத் தெரியவில்லை. இதோ அந்தப் பட்டியல்!

    1. அனுப்பிச்சாச்சே... இன்னும் வந்து சேரலையா?
    2. இந்தப் புடவைல நீ பருமனாவே தெரியலை!
    3. இப்படித் தலை வாரினா, உங்களுக்கு நல்லா இருக்கு!
    4. நாப்பது வயசுனு சொல்லவே முடியாது!
    5. ஒரு தடவை கேட்டுட்டா, அப்படியே பாடிடுவா!
    6. ஒரே ஒரு மார்க்ல போச்சு!
    7. இந்த விருதை நான் எதிர்பார்க்கவே இல்லை.
    8. உங்க நம்பர் என்கேஜ்டாவே இருந்தது!
    9. நான் பொய் சொல்லவே மாட்டேன்.
    10. ஏழ்மை நிச்சயம் ஒழிஞ்சுடும்!

    இந்த 'டாப் 10' பொய்களில் விட்டுப்போன கீழ்வரும் வார்த்தைகளைச் சேர்த்தால், 'டாப் 10' நிஜங்கள்...

    1. எத்தனைனு ஞாபகமில்லை.
    2. விலையையே பார்த்துக்கிட்டு இருக்கேன்.
    3. வழுக்கையை மறைக்கிறதால...
    4. நாப்பத்தஞ்சு சொல்லலாம்.
    5. அபஸ்வரமா!
    6. நாலாவது தடவையும்.
    7. எத்தனை பேரைப் பார்த்து, எத்தனை லஞ்சம் கொடுத்தேன்!
    8. உங்க நம்பர் என்ன?
    9. மௌன விரதத்தின்போது!
    10. எப்பனு சொல்ல மாட்டேன்.

    *'கற்றதும் பெற்றதும்’ – சுஜாதா*

    ReplyDelete