எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 19 January 2020

பார்வை


ரயிலிலிருந்து
இறங்கி
கையில் கம்புடன்
தரையை
தட்டித் தட்டி நடக்கும்
கண் தெரியாதவரை
எதிரே வந்து
மோதும்
இளைஞனின்
கண்களில்
கைப்பேசி..!


                   - கி. அற்புதராஜு.

Wednesday 1 January 2020

நேற்று நான் இன்று நீ..!


நேற்று
செடிகளில் இலைகளை
கிள்ளிப் போட்ட
எதிர் வீட்டுக் குழந்தைக்கு
பக்குவமாக சொன்னேன்...
இலைகளை கிள்ளினால்
செடிகளுக்கு வலிக்குமென்று..!

இன்று
புத்தாண்டுக்கு
வாசலில் வைக்க
மாவிலைக் கொத்தை
பறித்துச்செல்லும் என்னை
விநோதமாக பார்த்தது
அதேக் குழந்தை..!


                    - கி. அற்புதராஜு (01.01.2020).