எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday, 11 June 2021

படித்ததில் பிடித்தவை (“சித்திரைப் பட்டம்” – மீனா சுந்தர் கவிதை)

 


*சித்திரைப் பட்டம்*

 

வருடம் தவறாமல்

சித்திரைப் பட்டத்தில்

சுரைக்கொடி விதை போட்டு

கூரை மேல்

ஏற்றிவிடுவாள் அம்மா.

காய்ப்பது ஒருபுறம்.

பொட்டுப்பொட்டாய் நடுவீட்டில்

சூரியத்துளிகள்

ஒழுகி விழுவதைத்

தடுக்குமென்கிற தந்திரம்கூட..!

 

*மீனா சுந்தர்*


4 comments:

  1. செல்லதுரை11 June 2021 at 06:26

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  2. சத்தியன்11 June 2021 at 06:44

    கவிதை அருமை.
    கவிஞருக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  3. கெங்கையா11 June 2021 at 07:38

    கவிதை மிக அருமை.
    கவிஞருக்கு பாராட்டுக்கள் பல.

    ReplyDelete
  4. ஸ்ரீராம்11 June 2021 at 08:46

    மிக அருமை.

    ReplyDelete