எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday 31 January 2014

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)

                                                                       
1. “எத்தனை ஜோடிகள்
   இருந்தென்ன...
   யாராலும் ரசிக்கப்படாமல்
   கடலும்,
   விரிந்த வானமும்!”

-          நிந்தியூர் ஷிப்லி.

                                                                       

2. “மாதம் ஒரு முறை எனக்கு
   சிம்மாசனமும் கொடுத்து
   பொன்னாடையும் போர்த்துகிறார்
   சலூன்காரர்!”


-          முகம்மது சாதிக் அலி.

Thursday 30 January 2014

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)

     1.  “காலம்    
      என்
      கேலிச் சித்திரத்தை
      வரைந்து விட்டது..!”

-          வண்ணதாசன்.

      2.  “பேருந்து பயணத்தில்
இயற்கை அழகை
ரசிக்க முடியவில்லை...
கண்டக்டரின்
சில்லரை பாக்கி!”


-          ப. கோபிபச்சமுத்து.

Wednesday 29 January 2014

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)

                                                             
          1.      “சில நாழிகை
     வாழும்
     சிற்றீசல் கூட
     தீபங்கள்
     தேடும்!”
-          கவிஞர் வைரமுத்து
 (வானமே எல்லை)

                                       

          2.      “கந்தையானாலும்
     கசக்கி கட்டு என்கிறீர்கள்;
     அது சரி...
     கசக்கும் போது நான்
     எதை கட்டுவது?”

Tuesday 28 January 2014

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)

                                                                             
          1.      ‘ஓடும் பேருந்தில்
ஓயாது ஒலிக்கிறது
“வாழ்வே மாயம்”.
ஓட்டுனரின் காதல்
நிறுத்தத்தை
அடைந்திருக்கும் போல..!’

-          செல்வேந்திரன்.

                                                       

          2.       “மௌன அஞ்சலியின் போது
      வருத்தப்பட வைத்தது
      தொப்பை!”


-          வீ. விஷ்ணுகுமார்.

Monday 27 January 2014

படித்ததில் பிடித்தவை (பிள்ளையார் சுழி - கவிதை)

                                                                   
"ஆற்றங்கரைப்
     பிள்ளையாருக்கு
     கிராமத்துப்
     பெண்டுகள் மீது
     கோபமோ கோபம்.

     ஆண்டவனாய்
     என்னை
     வணங்காவிட்டாலும்
     பரவாயில்லை.

     ஒரு ஆண் பிள்ளையாய்
     நடத்தக்கூடாதா?

     குளித்துவிட்டு வந்து
     ஈரப்புடவையை
     என் பக்கம் திரும்பி நின்றா
     மாற்றிக் கொள்வார்கள்.

     சீச்சீ!"


-          தஞ்சாவூர் கவிராயர்

Sunday 26 January 2014

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)

                                                                       
                                                          
      1.       “சிவப்பு நிறமே
    பொருத்தம்
    பட்டுப்புடவைகளுக்கு..!”

 -          அஸ்லம் பாஷா.
                    

                         
      2.      “மலர்ந்த பின்தான்
      பறிக்கிறோம்
   பெண்களின்
   சுதந்திரத்தையும்..!”
                                        
 -          R. வித்யாதரன்.

Saturday 25 January 2014

Friday 24 January 2014

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)

                                                                                 
          1.     “அவன்
பட்டு வேட்டி கட்டும்
கனாவில்
இருந்த போது – அவன்
கட்டியிருந்த
கோவணம்
களவாடப்பட்டது..!”

 -  கவிஞர் வைரமுத்து.

                                                                   

           2.   “பெண்களிடம் பேசுகையில்
      கன்னத்தில் அறைவதாய்ப்படும்
      மாராப்புச் சரிசெய்தல்கள்..!”

    -   இரவி.

Thursday 23 January 2014

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)

                                                                                             

 1.  "உடைந்த பொம்மை
            அழாத குழந்தை
            கவலையோடு அப்பா..!"

                   -  சிவா.
                                     
                                                                                                     

           2. “சிறகிலிருந்து பிரிந்த
             இறகு ஒன்று
             காற்றின்
             தீராத பக்கங்களில்
             ஒரு பறவையின் வாழ்வை
             எழுதிக் கொண்டிருக்கிறது..!”

                                           -   பிரமிள்.

Wednesday 22 January 2014

கோழி குஞ்சு (ஓவியம்)


                                                         (ஓவியம்: K. அற்புதராஜு, 07.12.1989)


                                               "தப்பித்த முட்டையிலிருந்து
                                                வந்தது கோழி குஞ்சு..!
                                                தப்பிக்குமா கோழியாகி
                                                முட்டையிடும் வரை..?"

                                                                           - K. அற்புதராஜு   

Tuesday 21 January 2014

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)

                                                                                   

     1.   "கோழித்திருடனை
           ஜெயில்ல போட்டாங்க...                 
           ஜெயில்ல அவனுக்கு
           கோழிக்கறி போட்டாங்க..!"
                                            
      - ஒப்பிலான்.

                                        

2.  "மாங்கல்யத்தின் மகிமையை 
      மனைவி அறிவாள் …
      மணவாளன் அறிவான் …
      அவர்கள் இருவரையும் விட 
      மார்வாடியே 
      அதிகம் அறிவான்...!' 


             - கவிஞர் தமிழன்பன்.

Monday 20 January 2014

படித்ததில் பிடித்தவை (கேள்வி - பதில்)


       கேள்வி:   "தாய்... தாரம்" யார் தைரியசாலி?

        பதில்:      "புலியை குட்டியிலிருந்தே வளர்த்து பெரிய புலியாக மாற்றி, பயம்
                          இன்றி அதனுடன் வாழ்ந்து வந்தவர் ஒருவர்.

                          பிறகு அந்தப் புலி சர்க்கஸுக்கு விற்கப்பட்டு, ரிங் மாஸ்டரால்
                          அடக்கப்பட்டு, வாலைச் சுருட்டி சலாம் வைக்கும்.

                          இதில் புலியை வளர்த்தவர்  தைரியசாலியா...?

                          சலாம் போட வைத்தவர் தைரியசாலியா...?"


                                                                  --  பி. மாணிக்கவாசகம், கும்பகோணம்

                     (நன்றி: ஆனந்த விகடன் - நானே கேள்வி... நானே பதில்! - 22.01.2014.)

Sunday 19 January 2014

படித்ததில் பிடித்தவை (சுஜாதாவின் 9 சிறுகதை விதிகள் - கட்டுரை)


சுஜாதாவின் 9 சிறுகதை விதிகள்

எழுத்தாளர் சுஜாதா கூறும் சிறுகதைக்கான யோசனைகள் கொஞ்சம் பிரபலமானவைஇலக்கிய எழுத்துகளுக்கு இவைகள் பெரிதும் பயன்படப் போவதில்லை என்றாலும் வெகுஜன எழுத்துகளுக்கு பயன்படும். 

சுஜாதா கூறுகிறார்:

     1.   தப்பான பத்திரிக்கைக்கு அனுப்பாதீர்கள். துருவனும்       குகனும்’ என்று ஞான பூமிக்கு அனுப்ப வேண்டியதை, ‘போலீஸ் செய்திக்கு அனுப்பாதீர்கள்.

     2.   தெரியாத இடம்தெரியாத பொருளைப் பற்றி எழுதாதீர்கள். பம்பாய் ரங்காச்சாரி வீதிஇரவு ஏழு மணி இருள்என்றால், பம்பாயில் ரங்காச்சாரி வீதி கிடையாது, இரவு ஏழு மணிக்கு இருட்டாது என்று ஒரு கோஷ்டி ஆசிரியருக்குக் கடிதம் எழுதக் காத்திருக்கும்.

     3.   அந்தரத்தில் எழுதாதீர்கள். அதாவதுஉங்கள் கதை கருந்தட்டான்குடியிலோமதராஸ் 78லோ எங்காவது ஓர் இடத்தில் நிகழட்டும். அதற்குக் கால்கள் வேண்டும். ஜியாக்ரபி வேண்டும். மிகச் சுலபம் உங்கள் சொந்த ஊர், சொந்த வீதி

     4.   சொந்தக் கதையை எழுதாதீர்கள். மற்றவர் கதையை எழுத முயற்சி செய்யுங்கள். இரண்டு மூன்று பேர் சொன்ன கதைகளையும் சம்பவங்களையும் இணைத்து எழுதிப் பாருங்கள். கேஸ் போட்டால் தப்பிக்கலாம்.

     5.   பெரிய பெரிய வாக்கியங்கள்வார்த்தைகள் வேண்டாம். உமிழ் நீரைத்தொண்டைக் குழியிலிருந்து உருட்டித் திரட்டி உதடுகளின் அருகே கொணர்ந்து நாக்கின் முன் பகுதியால் வெளியேற்றினான்.’ என்று சொல்வதை விட துப்பினான்’ என்பது மேல்.

     6.   ஒரு வார்த்தையை ஒரு கதையில் ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தாதீர்கள். அவன்இவன்கைகால் போன்ற அன்றாட வார்த்தைகள் தவிர; உதாரணமாக,
பரிணாமம்.  அவன் மனத்தின் எண்ணங்கள் பரிணாமம் பெற்று அந்த பரிணமிப்பில்… இத்தியாத்திக்குப் பதிலாக, ‘அவன் மனத்தில் எண்ணங்கள் மாறுதலடைந்து அந்தப் பரிணமிப்பில் பெட்டர். அதைவிட பரிணாமம் போன்ற வார்த்தைகளைத் தவிர்ப்பது மேல்.

     7.   தெரிந்தவர்களின்உறவுக்காரர்களின் பெயர்களைக் கதை மாந்தர்களுக்குச்சூட்டாதீர்கள். டெலிபோன் டைரக்டரியையோ செய்தித்தாளையோ திறந்தால் எத்தனையோ பெயர்கள். என் நண்பர் ஓர் எழுத்தாளர்; கும்பகோணத்தில் ஒரு வக்கீல் பெண்ணைப் பெயர், அட்ரஸ் சகிதம் கதையில் உண்மையாகக் குறிப்பிட்டு, அந்தப் பெண்ணின் அப்பா பத்திரிக்கை மேல் கேஸ் போட்டு விட்டார். ரியலிஸம் என்பது பேர் வைப்பது அல்ல.

     8.     நிறைய எழுதாதீர்கள். முதல் ட்ராப்ட்டைப் பாதியாகக் குறைத்துஅதே கதையைச் சொல்ல முடியுமா பாருங்கள். அவன் அங்கே போனான் என்பதை விட போனான்’ என்பதில் அவனும் அங்கேயும் இருக்கின்றது. அதற்காக னான்’ என்று அற்பமாகச் சுருக்க வேண்டாம். அதெல்லாம் என் போன்ற கோணங்கி எழுத்தாளர்களுக்கு.

9.   கடைசியாகஎழுதுவதை நிறுத்தாதீர்கள். சளைக்காதீர்கள். என்றாவது.எல்லாரிடமும்- ஆம், எல்லாரிடமும் ஒரு கதை- நல்ல கதை இருக்கிறது. தமிழ் சினிமா வெற்றிப்பட டைரக்டர்கள் போல இரண்டாவது கதையில்தான் பெரும்பாலும் மாட்டிக் கொள்வீர்கள். அதற்கு முதல் தேவை நிறையப் பார்க்க வேண்டும்நிறையப் படிக்க வேண்டும். குட்லக்.