*உன் ஒற்றைச்சொல்*
“ஒரு சிறு சண்டைக்கு
பிறகான கட்டாய
இருச்சக்கர பயணம்...
இருபக்கம் கால்கள்
போட்டமரும் வழக்கம் மாறி
ஒரு பக்கமாய் அமர்கிறாய்...
வழக்கமான தோள் பிடியின்றி
கம்பிகளை கெட்டியாய்
பிடித்துக் கொள்கிறாய்...
இருவருக்குமிடையேயான
இருக்கையின் இடைவெளியில்
ஒரு சிட்டுக்குருவி பறந்து போகிறது...
பக்கவாட்டு கண்ணாடியை உன்
முகம் பார்க்க திருப்பினால்
அதைப்பார்த்து நீ திரும்பி
கொள்கிறாய்...
வாகன இரைச்சல்கள் மத்தியில்
உன் மெளனங்களை உற்று
கேட்டுக்கொண்டிருக்கிறது
என் காதுகள்...
திடீரென குறுக்கே ஓடிவரும்
நாயை கண்டு அனிச்சையாய்
“பார்த்துங்க” என்ற
உன் ஒற்றைச்சொல்
உடைத்தெறிந்து விடுகிறது
மொத்த ஊடலையும்...
மெல்ல மீண்டெழுகிறது
மொத்த நேசங்களும்..!”
*க.பிரபு சங்கர்*
அருமை.
ReplyDeleteஅருமை அனைவருக்கும் இருக்கும் இந்த அனுபவம்.
ReplyDeleteகணவன் மனைவிக்கிடையேயான ஊடலையும்,எந்த நிலையிலும்
ReplyDeleteமாறாத மனைவியின்
நேசத்தையும் மிக அழகாக
இழைத்திருக்கிறார்
கவிதையில் கவிஞர்.
மிக அருமை.
கவிதை அருமை.
ReplyDeleteகவிஞரைப் பாராட்ட
வார்த்தைகள் இல்லை.
கவிதை அருமை.
ReplyDeleteஉண்மை.
அனைவரின் அனுபவம்.
கவிஞருக்கு பாராட்டுக்கள்.
அருமை
ReplyDelete