*மாலையில்
யாரோ...*
“சுமதி
அக்காவுக்கு
மாலையில் யாரோ மனதோடு பேச
பாடல் ரொம்பப் பிடிக்கும்.
எப்போதும்
முணுமுணுத்துக்கொண்டே
இருப்பாள்.
அவள் கல்யாணக் கேசட்டில்கூட
சின்னு மாமாவிடம் சொல்லி
முகூர்த்தப் பின்னணியில்
இந்தப் பாடலைத்தான் பதியச்
சொன்னாள்.
இது யாரு பாட்டுக்கா என்றால்
பானுப்ப்ரியா பாட்டு
என்பாள்.
சுமதி அக்காவை பின்னாளில்
சந்தித்தப்போது
பேச்சுவாக்கில்
இதே பாடலை நினைவுகூர்ந்து
இது யாரு பாட்டுன்னு
நினைவிருக்கா என்றேன்.
இளையராசா பாட்டு என்றாள்.
சமீபத்திய சந்திப்பில்
விளையாட்டாய்
இதே பாடலை பாடச் சொல்லிக்
கேட்டேன்.
சிரித்தபடியே பாடியவள்
இது ஸ்வர்ணலதா பாட்டு
தெரியுமா என்றாள்.
தெரியாது என்றேன்.
மாலையில் யாரோ... எப்போதும்
எனக்கு சுமதி அக்கா
பாட்டுதான்..!”
*மு.மகுடீசுவரன்*