எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday, 30 July 2019

படித்ததில் பிடித்தவை (“உங்கள் மழை” – கவிஞர். ஏகாதேசி கவிதை)


உங்கள் மழை

“உங்கள் பணம்…
உங்கள் இடம்…
உங்கள் வீடு…
உங்கள் குடும்பம்…
உங்கள் ஊர்…
உங்களை விட்டுப் போக
பொறுப்பீர்களா..?

பின் எப்படி முடிகிறது
உங்கள் மழையை மட்டும்
வாய்க்கால் வெட்டி
வழியனுப்பி வைக்க..!”

- க. ஏகாதேசி.

Monday, 1 July 2019

படித்ததில் பிடித்தவை (“ஈரமாக மழை” – மீள் கவிதை)


ஈரமாக மழை

“தட்டாம்பூச்சிகள்
தாழப் பறந்தால்
தவறாது மழை என்பாள்
எங்கள் பாட்டி..!

இப்போது
தட்டாம்பூச்சியும்
எங்கள் பாட்டியும்
இருக்கிறார்கள் படமாய்..!

மழை
நினைவில்தான்
இருக்கிறது
ஈரமாக..!”

(மீள்).