*காத்திருப்பு*
“தாவாங்கட்டையைப்
பிடித்து
தலையில் வகிடு எடுத்து
இரட்டைப் பின்னலிட்டு
பான்ஸ் பௌடரை அளவாகப் பூசி
பழிப்பு காட்டியபடியே
கண்ணில் மை தீட்டி
சிவப்பு நிற
சாந்துப்பொட்டால்
நெத்தியிட்டு
மல்லி கனகாம்பரத்தைத்
தலையில் சூட்டி
அழகை ரசித்துக் கன்னம் தடவி
நெட்டி
எடுத்துக்கொண்டிருக்கின்றாள் அம்மா
இன்னும் சற்று நேரம்
என்னை உறங்க விடுங்கள்
அம்மாவின் முத்தம் ஒன்று
பாக்கி இருக்கின்றது..!”
*சரண்யா சத்தியநாராயணன்*
என்றென்றும்
ReplyDeleteகவிதை அருமை.
ReplyDeleteமிக அருமை.
ReplyDeleteதாயன்பிற்கும்
ReplyDeleteபெண் குழந்தைக்கும்
இடையிலான உறவிற்கு
நிகரில்லை இவ்வுலகில்..!
தாய் பாசம்
ReplyDeleteகவிதை அருமை.
கவிதை மிக அருமை.
ReplyDeleteTo hug with smile.
ReplyDelete