எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Showing posts with label ஓவியங்கள். Show all posts
Showing posts with label ஓவியங்கள். Show all posts

Thursday, 2 July 2015

ஓவியம் (இந்திராகாந்தி)



                                               (ஓவியம்: K. அற்புதராஜு, 31.10.1989)

Indira Gandhi

Former Prime Minister of India.

Indira Priyadarshini Gandhi was the fourth Prime Minister of India and a central figure of the Indian National Congress party.

Born: November 19, 1917, Allahabad.

Assassinated: October 31, 1984, New Delhi.

Spouse: Feroze Gandhi (m.1942–1960).

Parents: Jawaharlal Nehru, Kamala Nehru.

Children: Rajiv Gandhi, Sanjay Gandhi.

Awards: Bharat Ratna, Jawaharlal Nehru Award for International 
             Understanding, Lenin Peace Prize.

Tuesday, 16 September 2014

குழந்தை (ஓவியம்)


 (ஓவியம்: K. அற்புதராஜு, 01.11.1990)

  குழந்தையின் சிரிப்பு

ஒரு
பள்ளத்தாக்கு முழுக்கப்
பூப் பூக்கட்டுமே
ஒரு
குழந்தையின் சிரிப்புக்கு ஈடாகுமா?

                                                           -   கவிஞர். வைரமுத்து.

Saturday, 8 February 2014

சூரியகாந்தி பூ (ஓவியம்)

                                              (ஓவியம்: K. அற்புதராஜு, 15.01.2013)


 கிராமப் பிரவேசம் (கவிதை)

"சூரியகாந்தி பூக்களின் பயணம்
 கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி
 சூரியனை தொடர்ந்தே...

 அது சரி,
 மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிய
 பயணம் எப்போது?
 காலை சூரியனை பார்த்தவுடனா?
 இல்லை... இரவு முழுவதுமா?

 இதை பார்க்கவாவது
 கிராமப் பிரவேசம் 
 செய்ய வேண்டும் பூக்களே..!"

                                - K. அற்புதராஜு.



Saturday, 25 January 2014

Wednesday, 22 January 2014

கோழி குஞ்சு (ஓவியம்)


                                                         (ஓவியம்: K. அற்புதராஜு, 07.12.1989)


                                               "தப்பித்த முட்டையிலிருந்து
                                                வந்தது கோழி குஞ்சு..!
                                                தப்பிக்குமா கோழியாகி
                                                முட்டையிடும் வரை..?"

                                                                           - K. அற்புதராஜு   

Saturday, 18 January 2014

சேமிப்பு (ஓவியம்)

                                                                         (ஓவியம்: K. அற்புதராஜு, 31.10.2002)

  World Savings Day - 31st October.

எறும்பு - வைரமுத்து

"எறும்புகளே எறும்புகளே
உயிர்த்துளிகளின் ஊர்வலங்களே
பத்துக்கோடி ஆண்டுகள் முன்னே
பூமியில் ஊர்ந்த பூச்சியினமே!

உலகின் மிகச்சிறிய ஆச்சரியமே!
உங்களோடு பேசவேண்டும்
சிறிதுநேரம் செவி சாய்ப்பீரா?

நின்று பேசி நேரம் கழிக்க
நாங்கள் ஒன்றும் மனிதர்கள் இல்லை
எது கேட்பதாயினும்
எம்மோடு ஊர்ந்து வாரும்

ஒரு செண்டி மீட்டரில்
ஊற்றி வைத்த உலகமே
அற்ப உயிரென்று
அவலப் பட்டதுண்டா?

பேதை மனிதரே
மில்லிமீட்டர் அளவிலும்
எம்மினத்தில் உயிருண்டு
தன் எடைபோல ஐம்பது
மடங்கு எறும்பு சுமக்கும்
நீர் சுமப்பீரா?

உங்கள் பொழுது போக்கு?

வாழ்வே பொழுது போக்கு
தேடலே விளையாட்டு
ஊர்தலே ஓய்வு

ஆறுமுதல் பத்து வாரம்
ஆயுள் கொண்ட வாழ்வு
இதில் ஓய்வென்ன ஓய்வு
தலை சாய்வென்ன - சாய்வு

இந்த ஆயுளுக்கா
இத்தனை பாடு?

உம்மைப் போல் எமக்கு
ஒற்றை வயிறல்ல
இரட்டை வயிறு
நெரிக்க ஒன்று
சேமிக்க ஒன்று

செரிக்கும் வயிறு எமக்கு
சேமிக்கும் வயிறு
இன்னோர் எறும்புக்கு
இரண்டு வயிற்றுக்குத்தான்
இத்தனை பாடு.

இனப் பெருமை பற்றிச்
சிறு குறிப்பு வரைக!

சிந்து சமவெளிக்கு முற்பட்டது
எங்கள் பொந்து நாகரிகம்

ராணிக்கென்று அந்தப்புரம்
உழைக்கும் எறும்புகள் வசிப்பறை
இறந்த எறும்பை அடக்கம் செய்ய
இடிபாடில்லாத இடுகாடு

மாரிகால சேமிப்புக் கிடங்கு
எல்லாம் அமைந்தது எங்கள்
ராஜாங்கம்

எங்கள் வாழ்க்கையின்
நீளமான நகல்கள்தான் நீங்கள்!

உங்களையே நீங்கள்
வியந்து கொள்வது எப்போது?

மயிலிறகால் அடித்தாலே
மாய்ந்துவிடும் எங்கள் ஜாதி
மதயானைக்குள் புகுந்து
மாய்த்துவிடும்போது.

நீங்கள் வெறுப்பது எது?
நேசிப்பது எது?

வெறுப்பது வாசல் தெளிக்கையிலே
வந்து விழும் கடல்களை
நேசிப்பது அரிசிமா
கோலமிடும் அண்ணபூரணிகளை

சேமிக்கும் தானியங்கள்
முளை கொண்டால் எது செய்வீர்?

கவரும்போதே தானியங்களுக்கு
கருத்தடை செய்து விடுகிறோம்
முளை களைந்த மணிகள்
முளைப்பதில்லை மனிதா!

உங்களால் மறக்க முடியாதது?

உங்கள் அகிம்சைப் போராட்ட
ஊர்வலத்தில் எங்கள் நான்காயிரம்
முன்னோர்கள் நசுங்கிச் செத்தது.

எதிர்வரும் எறும்புகளை
மூக்கோடு மூக்குரசும் காரணம்?

எங்கள் காலணி எறும்புதானா
வென மோப்பம் பிடிக்கும் முயற்சி
எம்மவர் என்றால் வழி விடுவோம்
அந்நியர் என்றால் தலையிடுவோம்

சிறிய மூர்த்திகளே
உங்கள் பெரிய கீர்த்தி எது?

அமேசான் காட்டு ராணுவ
எறும்புகள் யானை வழியில்
இறந்து கிடந்தால் முழு
யானையைத் தின்றே முன்னேறும்
மறவாதீர் எறும்புகளின்
வயிறுகள் யானைகளின்
கல்லறைகள்.

சாத்வீகம்தானே உங்கள்
வாழ்க்கை முறை?

இல்லை எங்களுக்குள்ளும்
வழிப்பறி உண்டு
எங்களுக்குள்ளும் யுத்தங்கள் உண்டு

அபாயம் அறிவிக்க
சத்தம் எழுப்பி
சைகை செய்வதுண்டு

எறும்புகளின் சத்தமா?
இதுவரை கேட்டதில்லையே!

மனிதர்கள் செவிடாயிருந்தால்
எறும்புகள்
என்ன செய்யும்?

நன்றி எறும்பே நன்றி!

நாங்கள் சொல்ல வேண்டும்
நன்றி உமக்கு
ஏன்? எதற்கு?

காணாத காமதேனுவைப் பற்றி
இல்லாத ஆதிசேஷன் பற்றி
பொய்யில் நனைந்த புராணம்
வளர்க்கும் நீங்கள்
இருக்கும் எங்களைப் பற்றி
இன்றேனும் எண்ணிப் பார்த்தீரே
அதற்கு!"

Wednesday, 15 January 2014

விளையாட்டு வீரன் (ஓவியம்)


                                                         (ஓவியம்: K. அற்புதராஜு, 07.12.1985)

                      Art Model:  Daley Thompson, Sports person (Decathlon) / UK.                         

                         

"Daley" Thompson (born 30 July 1958), is a former decathlete from the UK. He won the decathlon gold medal at the Olympic Games in 1980 and 1984, and broke the world record for the event four times.

Sunday, 12 January 2014

பெண் (ஓவியம்)

பெண் ஓவியம்
                                                         (ஓவியம்: K. அற்புதராஜு, 07.12.1986)