எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday, 18 June 2021

படித்ததில் பிடித்தவை (“நீ பாதி நான் பாதி” – துரை. நந்தகுமார் கவிதை)


*நீ பாதி நான் பாதி*

 

இருந்த காசில்

வாங்கி வந்த கமர்க்கட்டை

ஆளாளுக்கு சமமாய்ப் பிரிக்க

அரைமணி நேரம் செலவழித்து

யாருக்கும் பங்கமில்லாது

சட்டை நுனியோரமதைப் புதைத்து

காக்கா கடிகடித்து

சரிபாதியாய் பங்கிட்ட

அண்ணன்…

 

மாறியேப்போனான்

அப்பாவின் நிலத்தை

பங்கிடும்போது..!

 

*துரை. நந்தகுமார்*


6 comments:

  1. சத்தியன்18 June 2021 at 07:48

    கவிஞருக்கு பாராட்டுகள்.
    கவிதை அருமை.

    ReplyDelete
  2. ஸ்ரீராம்18 June 2021 at 09:08

    வாசல் வேறாகி
    விடும் போது
    உறவுகளின் புனிதம்
    முற்றிலும் மாறி விடுகிறது.
    இது இன்றைய வாழ்வின்
    மிக கசப்பான உண்மை.

    ReplyDelete
  3. ரொம்ப அருமை sir

    ReplyDelete
  4. K. ஜெயராமன்18 June 2021 at 15:24

    அருமை.
    சிறாராய் இருக்கையில்
    தான் என்பது வளர்வதில்லை.
    ஆதலால் பகிர்தல் எளிது.
    வளர வளர நிறைய நான்கள்
    சேருவதால் சுயநலமே
    வளருகிறது.

    ReplyDelete
  5. கவிதை அருமை.
    கவிஞருக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  6. கெங்கையா18 June 2021 at 16:47

    கவிதை மிக அருமை.
    உண்மை.
    அனைவரின் அனுபவம்.
    கவிஞருக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete