*ஆறு*
“நிறைவின் போதும்
நிறைவின்மையின் போதும்
அப்படியே இருக்கிறது ஆறு.
நிறைவின்
நீர்ப்புன்னகையை விடவும்,
நிறைவின்மையின்
மணற்சிரிப்பு
இன்னும் அழகு..!”
No comments:
Post a Comment