*முரண்*
“சாமி
படத்தின் அருகே
வைக்கப்பட்ட கற்கண்டுகளை
பூசை மாடத்தில் இருந்து
எறும்புகள் இழுத்துப் போவதை
ரசித்துக்கொண்டிருந்த
அதே சமையல் அறையில்தான்
முன்னிரவு
நான் கிழித்திருந்த
பூச்சிக்கொல்லி சாக்பீஸ்
கோடுகளுக்கு
பலியாகிக் கிடந்தன
கரப்பான் பூச்சிகள்..!”
*தி.கலையரசி*
கவிதை அருமை.
ReplyDeleteமிக அருமை.
ReplyDelete