*கடவுளும்
மனிதனும்*
“கடவுள்
மனிதனை படைத்தார்.
மனிதனும்
பல கடவுள்களை படைத்தான்.
மனிதன்
கடவுள் இல்லா இடங்களில்
பேயை கண்டான்.
கடவுள்
மனிதம் இல்லா மனித மனங்களில்
பேயை கண்டார்.
கடவுள்
மனிதன் மனதை
கல்லாய் கண்டார்.
மனிதன்
கடவுளை
கல்லில் கண்டான்.
மனிதன்
சில தருணங்களில்
கடவுள் ஆனான்.
கடவுள்
இதிகாசங்களில்
மனிதன் ஆனார்.
கடவுளும்
பூமியில் மனிதனை
தேடுகிறார்.
மனிதன்
கடவுளை தேடி
அலைகிறான்.
ஆனால் இறுதியில்,
கடவுள்
கடவுளாகவே இருக்கிறார்.
மனிதன்
மனிதனாகவே இருக்கிறான்..!”
*நல்லவன்*
மிகச் சரியான உண்மை.
ReplyDeleteகவிதை மிகவும் அருமை.
ReplyDeleteகடவுளையும் மனிதரையும்
ReplyDeleteஒப்பிட்டு வித்தியாசமான
கோணத்தில் அலசுகிறார்
கவிஞர்.
மனிதன் மாறவே இல்லை
என அழகாக சொல்கிறார்
கவிதையின் கடைசி வரிகளில்.
மிக அழகான கவிதை.
கவிதை அருமை.
ReplyDeleteநன்று.
ReplyDelete