*துரத்திய
இயந்திரம்*
“வழக்கமாய்
கதிர் அரிவாள் சத்தங்களை
சந்தங்களாகக் கேட்டு
நெல் கொத்திப் பழகி
வரப்புமேல் வந்தமரும்
பறவைகளை விரட்டியபடி
இரைச்சலோடு
இயங்கிக்கொண்டிருக்கிறது
கதிர் அறுக்கும் இயந்திரம்..!
நிலமற்று பிழைத்து வந்த
விவசாயக்கூலிகளை
வயல்விட்டு
துரத்தியதுபோலவே..!”
*சாமி கிரிஷ்*
நவீனமயமாதலின்
ReplyDeleteஇயற்க்கைக்கு
எதிரான விளைவை
மிக நளினமாக
சுட்டிக்காட்டும் கவிதை.
கவிதை அருமை.
ReplyDeleteகவிதை மிக அருமை.
ReplyDelete