எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 29 November 2014

மெரசலாயிட்டேன்...


“இரு சக்கர வாகனத்தை
ஓட்டும் அம்மாவுக்கு முன்னால்
நின்று பயணிக்கும் சிறுவன்
நான் இரு சக்கர வாகனத்தில்
அவர்களின் வண்டியை
முந்தியவுடன்...
‘அம்மா முந்து முந்து  
வேகமா போ...’ என
அழத்துவங்கி விட்டான்.

நானும் பிரேக் பிடித்து
மெதுவாக அவர்களை
பின் தொடர்ந்து
அந்த சிறுவனின்
அழுகையை மாற்றி
சிரிக்க வைத்து அவனை
மெரசலாக்கினேன்.

அந்த பயணத்தில்...
நானும் குழந்தையாகி
மெரசலாயிட்டேன்..!”

                                 -   K. அற்புதராஜு.

Tuesday 25 November 2014

படித்ததில் பிடித்தவை (கவிதை)


“கணவன் சரியில்லை
மனைவி குற்றச்சாட்டு.
மனைவி சரியில்லை
கணவன் குற்றச்சாட்டு.
பாவம் பிள்ளைகள்...
யாரிடம் சொல்வார்கள்
தாய், தந்தை
சரியில்லை என்று..!”

            - வே. பாலமணிகண்டன்.

Saturday 22 November 2014

படித்ததில் பிடித்தவை (கவிதை)


லுங்கி கொஞ்சம் கொஞ்சமாக அவிழ்கிறது!
“ஆண்களின் தாவணி
லுங்கி என்றால் மிகையாகாது.
காரணம்
லுங்கி வயது வந்தவர்களுக்கானது.
வீட்டில் துவைத்த லுங்கிகளை
யார் வேண்டுமானாலும் உடுத்தலாம்.
லுங்கி வேற்றுமையில் ஒற்றுமையில்
உருவானது.
லுங்கி இல்லாத வீட்டில்
ஆண்கள் இல்லையென்றும்
அர்த்தம் கொள்ளலாம்.
அரைஞாண் கயிறு கட்டும் பழக்கத்தை
இன்னமும் லுங்கிகளே
தாங்கிப்பிடித்திருக்கின்றன.
போன வாரம்
லுங்கி கட்டிக்கொண்டு
கே.எப்.சி. போயிருந்தேன்.
கடைக்காரன் என்னை மட்டும்
வித்தியாசமாகப் பார்த்தான்.
எனக்கொன்றும் புரியவில்லை.
கடந்த பதினாறு வருடங்களாக
மட்டன் வாங்க
லுங்கி கட்டிக்கொண்டுதான்
பாய் கடைக்குப் போய் வருகிறேன்.
ஒரு நாளும்
அவர் என்னை அப்படிப் பார்த்ததில்லை!”

                                                          - அசோக் பழனியப்பன்.

Wednesday 19 November 2014

படித்ததில் பிடித்தவை (கவிதை)


“சட்டை பொத்தான்கள்
சொல் பேச்சுக் கேட்கின்றன.

சைக்கிளில் மோதுகிறேன்
சிரித்து விட்டுப் போகிறான்.

பேப்பர் படித்தவர்கள்
குறைவாகப் பேசுகிறார்கள்.

ஒரே மாதிரியாக இல்லை
வாழ்க்கை..!”
                   -  கபிலன் வைரமுத்து.
     (மனிதனுக்கு அடுத்தவன்)

Sunday 16 November 2014

படித்ததில் பிடித்தவை (சுஜாதாவின் கவிதை)


“கவிதை எனக்கு வராது
அதன் சுருக்கம் நெருக்கம்
சிக்கனம் மெத்தனம் யத்தனம்
எல்லாம் எனக்கு
நடுக்கம்


நான் உரைநடை ஆசாமி
வாக்கியங்கள் நீளலாம்
வேண்டுமிடத்தில் மாளலாம்
நெளிய வேண்டாம்
காதல் போன்ற அபத்தங்களில்
ஒளிய வேண்டாம்
வார்த்தைகளைச் சலிக்க வேண்டாம்
அவை மணியோசை போல
ஒலிக்க வேண்டாம்”
** ** ** ** **
“கவிதை கவிஞர்களுக்கு...
உரைநடை கலகங்களுக்கு..!”

                         -   எழுத்தாளர் சுஜாதா.

Thursday 13 November 2014

படித்ததில் பிடித்தவை (கவிதை)


“இலைகள் மல்லாந்து படுத்து வானம் பார்க்க...
தார்ச் சாலைகள்  செஞ்சிவப்பில் குளிக்க...
தூசிகள் பேருந்துகளை துரத்தாமல் ஓய்வெடுக்க...
கூடு அடையும் மகிழ்வோடு பேருந்துகள்
ஒன்றையொன்று துரத்த...
அந்த உன்னத மாலைப்பொழுதில்
ஓர் அசிங்கப் பார்வையில்
என்னை கேவலப்படுத்திச் செல்கிறான்
அந்த மனிதன்..!”
                                            -   வெண்ணிலா.

(பெண்ணுக்கே உண்டான அவஸ்தையும் தவிப்பும் 
இயல்பாக மிளிர்கிறது - சுஜாதா)

Monday 10 November 2014

படித்ததில் பிடித்தவை (கவிதை)


“பிடிக்கவில்லை திரைப்படம்
பார்த்துக் கொண்டிருக்கிறேன்...
பிடித்திருக்கிறது
உன்னுடன் உட்கார்ந்திருப்பது.

மோசமாகத் திட்டினேன்
தீப்பெட்டி கேட்ட போது...
சிரித்து மறுத்து
நீ புகைத்து உதிர்த்த
வெண் சாம்பலையும்
சிகரெட் துண்டையும்
பார்த்திருந்தல் தரும்
சிலிர்ப்புக்காகத்
தெரிந்தே தினமும்
பெருக்காமல் விட்டு விடுகிறேன்
அந்த ஜன்னலோரத்தை மட்டும்..!”

- இளம்பிறை (பனிக்காலப்பதிவுகள்)

Sunday 9 November 2014

நகரத்துப் பெண்கள்...








“நகரங்களில்...
எஜமானி பெண்கள்
உடல் பயிற்சி செய்தும்...

வேலைக்காரப் பெண்கள்
வீட்டைப்பெருக்கி,
துணியை துவைத்து,
சமையல் செய்தும்...
ஆரோக்கியமாக 
இருக்கிறார்கள்..!”


          -  K. அற்புதராஜு.

Saturday 8 November 2014

பார்த்ததில் பிடித்தது (Mathematics - ALGEBRA)


Mathemagic - (a+b)²=a²+2ab+b²  But Why?



Video:




One of the elementary formula in high school mathematics, most of us know this formula.
But do we actually know why?
In this video Khurshed Batliwala, fondly called as Bawa, explains the reason behind this.
With a gold medal in Mathematics from IIT, Bombay, India, Khurshed is a faculty of The Art of Living founded by His Holiness Sri Sri Ravi Shankar.

According to Bawa he thought it is better to teach people how to breathe and make them happy than teach them Mathematics and make them miserable.


Download Link: http://www.youtube.com/watch?v=49_TJymgXgM

DISCLAIMER:

This video is posted for viewing pleasure and an information for the viewers. By this, I don't wish to violate any copyright owned by the respective owners of this video.

I don't own any copyright of this video. If this video is in violation of the copyright you own then, please let me know (E-Mail: arputharaju.k@gmail.com), I will remove it from my Blog.


** ** ** ** **

Friday 7 November 2014

இடம்


“பேருந்து நிறுத்தத்துக்கு
வந்த காலியான
பேருந்தில் ஏறி
உட்காரச் சென்ற
இளைஞன்...

மாற்றுத்திறனாளி /
முதியோர் இருக்கை
அறிவிப்பு ஸ்டிக்கரை
பார்த்தவுடன்
உட்காராமல்
பின்பக்க இருக்கையில்
உட்கார்ந்தான்...

பேருந்தின் அனைத்து
இருக்கைகளும்
நிறைந்தப்பின்...

அடுத்த நிறுத்தத்தில்
ஏறிய மாற்றுத்திறனாளி
அவருக்கு ஒதுக்கப்பட்ட
இருக்கைக்கு செல்லாமல்
இளைஞன் அருகில்
சென்றவுடன்...

அவன் எழுந்து தனது
இடத்தில் அவரை  
உட்கார வைத்து
எல்லோர் மனதிலும்
இடம் பிடித்தான்..!”

               -  K. அற்புதராஜு.