*உருமாற்றம்*
“வங்கியைப்
பொறுத்தவரை
நானெனப்படுவது
கஸ்டமர் ஐ.டி.
ஏ.டி.எம்-மைப் பொறுத்தவரை
நானெனப்படுவது
நான்கு இலக்க பின்.
சூப்பர் மார்க்கெட்டைப்
பொறுத்தவரை
நானெனப்படுவது
எனது மொபைல் எண்.
இணையப் பணப் பரிமாற்றத்தில்
நானெனப்படுவது
ஓ.டி.பி.
கணினியைப் பொறுத்தவரை
நானெனப்படுவது
எனது பாஸ்வேர்டு.
என்னிலிருந்தே
நானல்லாத
என்னை உருவாக்குகின்ற
மாயக்கரங்களால் ஆனது
டிஜிட்டல் உலகம்..!”
*ப்ரணா*
இந்த கவிதை நல்ல தொடக்கம். இதை மேலும் பின் தொடர்ந்தால் 'நான் யார்' என்ற என்றுமுள தத்துவக் கேள்வியின்முன் நிறுத்திவிடும்.
ReplyDeleteகவிதை மிக அருமை.
ReplyDeleteகவிதை அருமை.
ReplyDelete