*கூடவரும்
வைக்கோல்*
“இருசக்கர
வாகனத்தின் பின்சக்கரத்தில்
சிக்கிக்கொண்டு கூடவரும்
ஒரு வைக்கோல்
ஞாபகப்படுத்துகிறது...
ஒரு பச்சை வயலை
நாற்று நட்டப் பெண்ணை
சேறு குழப்பிய காளைகளை
வாய்க்கால் சுமந்த தண்ணீரை
தண்ணீருக்காக நடந்த
உண்ணாவிரதத்தை
வரப்பிலமர்ந்து உண்ட
மத்தியானச் சோற்றை
கோவணத்தோடு ஏரோட்டும்
தாத்தாவை
பயத்தை ஏற்படுத்திய
சர்ப்பத்தை
வளையல் கரங்களில்
விளைந்திருந்த கருக்கருவாளை
வேலாமரத்தில் தொங்கிய தூளியை
மருந்து தெளிப்பானின் சுருதி
பிசகாத ஓலத்தை
வயல்களினூடே நேர்க்கோடுகளை
நீட்டியிருக்கும் தண்டவாளத்தை
தண்டவாளத்தில் எப்போதேனும்
தடதடத்துப்போகும் ரயிலை
அறுவடைக் காலத்து
மாட்டுவண்டிகளை
வீட்டு முற்றத்தில் கூடு
கட்டும் சிட்டுக்குருவியை
இன்னும் தள்ளுபடியாகாத கடனை
வந்துசேராத மானியத்தை
தூக்கிட்டுக்கொண்ட
பரமசிவத்தை
கட்டடங்கள் கொலைசெய்த
வயல்வெளிகளை..!”
*சௌவி*
மிக அருமை.
ReplyDeleteஎன் நினைவுகளும் அப்படியே...
ReplyDeleteமிக அருமையான பதிவு
கவிதை மிக அருமை.
ReplyDeleteகவிதை மிகவும் அருமை.
ReplyDeleteஅது வைக்கோல் அல்ல.
ReplyDeleteஅது அனைவரும் உண்ண
போராடிய உழவன் என்ற
உயர்குடியின் நெடிய
போராட்ட வரலாறு!
கவிதை அருமை.
ReplyDelete