*சுருக்கக்
குறிப்பு*
“வேலையில்லா
திண்டாட்டம்
மாதத்தவணை கட்ட இயலா தவிப்பு
திறக்காத பள்ளிக்கு கட்டணம்
வங்கி அதிகாரிகளின் அர்ச்சனை
திமிங்கலகுட்டி போடும்
மீட்டர் வட்டி
புரிந்து கொள்ளாத இரத்த
உறவுகள்
விலகி போன சொந்தங்கள்
கை கொடுக்காத நட்பு
அதிகரித்த அழுத்தங்கள்
தண்டுவடத்தை நொறுக்கிய
பாரங்கள்
இவைகள் எதுவுமே
இறப்பிற்கான காரணமாகக்
குறிப்பிடப்படவில்லை...
தூக்கிட்டு தற்கொலை
செய்து கொண்டவனின்
பிரேத அறிக்கையில்..!”
*பா.சிவகுமார்*
கவிதை அருமை.
ReplyDeleteநிதர்சனமான உண்மைகள்...
ReplyDeleteகவிதை மிக அருமை.
சாமான்ய மனிதன்
ReplyDeleteஅன்றாடம் எதிர்கொள்ளும்
வேதனைகளை அற்புதமாக
கவிதையில் வடித்திருக்கிறார்
கவிஞர்.
கவிதை அருமை.
ReplyDeleteஅருமையான கவிதை.
ReplyDeleteமிருந்த துயரம்.
ReplyDelete