எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 29 June 2014

பார்த்ததில் பிடித்தது (செல்வம் - தமிழ் குறும்படம்)


கலைஞர் டிவி - நாளைய இயக்குனர் - சீசன் இரண்டில் தேர்வு செய்யப்பட்ட குறும்படம்.

செல்வம் - தமிழ் குறும்படம்

ஒளிப்பதிவு, எழுத்து & இயக்கம்: கொ. ரங்கநாதன்

இசை: நியூட்டன் & தன்ராஜ்

எடிட்டிங்: சு. ஆனந்த்

கிராபிக்ஸ்: ஜெகதீஷ்

இணை இயக்கம்: செல்வம்

உதவி இயக்கம்: பிரேம், விஜயகுமார், பிராங்க்ளின் & ஜெகன்

நடிகர்கள்: முத்தையா, ஸ்ரீமதி, பேபி. திவ்யஸ்ரீ, ஜஸ்டின், சுபேதவாகனன், பாண்டியன், டாக்டர். முத்துகிருஷ்ணன்

வெளியீடு: விண்மீன் படைப்பகம்



காணொளி காட்சி: 






1. இந்த காணொளி காட்சி      https://www.youtube.com/watch?v=y_lj44R6pa0      
    இணைப்பிலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டது.

2. இந்த காணொளி காட்சி எந்த வணிக நோக்கத்துடனும்
    வெளியிடப்படவில்லை.

3. இந்த காணொளி காட்சிக்கு தடைக்கூற விரும்பினால் arputharaju.k@gmail.com
    என்ற மின் அஞ்சலுக்கு தெரியப்படுத்தவும்.

Saturday 28 June 2014

படித்ததில் பிடித்தவை (கவிஞர். வாலியின் கவிதை)

“கடந்த காலமோ 
திரும்புவதில்லை...
நிகழ் காலமோ 
விரும்புவதில்லை...
எதிர் காலமோ 
அரும்புவதில்லை...
இதுதானே 
அறுபதின் நிலை..!”
                   - கவிஞர். வாலி 
(வெள்ளிவிழா திரைப்படப்பாடல்)

Friday 27 June 2014

படித்ததில் பிடித்தவை (நா. முத்துக்குமார் கவிதை)


“காதல் கவிதை
எழுதுகிறவர்கள்...
கவிதை மட்டுமே
எழுதிக்கொண்டிருக்கிறார்கள்..!

அதைப் படிக்கும்
பாக்கியசாலிகளே...
காதலித்துக்கொண்டிருக்கிறார்கள்..!”

                                                     -  நா. முத்துக்குமார்.

Thursday 26 June 2014

படித்ததில் பிடித்தவை (கவிதை)


“மகாபாரதம்
இதிகாசமானது.

பகவத் கீதை
வேதமானது.

கண்ணன், அர்ச்சுனர்
கடவுளானர்கள்.

எல்லாம் சரி             
கூட்டம் கூட்டமாய்
வெட்டிக்கொண்டும்
குத்திக்கொண்டும்
செத்துப்போன
சிப்பாய்கள்
என்ன ஆனார்கள்..?”
                      -  இரா. பூபாலன்.

Wednesday 25 June 2014

படித்ததில் பிடித்தவை (கவிதை)

குழந்தை கனவு
“நம்முடைய
கூலிங் கிளாஸை
எடுத்து அணியும் போதும்

நம்முடைய                  
செருப்பை அணிந்து
நடை பயிலும் போதும்

நம்முடைய
சட்டையை எடுத்து
மாட்டிக்கொள்ளும் போதும்
                                                                                     
நாமாக மாற
முயற்சிக்கிறது குழந்தை.

அதை ரசிக்கும்
பொழுதுகளில்
குழந்தையாக
மாறி விடுகிறோம்
நாம்..!”
                  -  ந. சிவநேசன்.

Tuesday 24 June 2014

படித்ததில் பிடித்தவை (கவிதை)

“எல்லோருக்கும்
ரசிப்புக்குரியதுதான்
புல்லாங்குழலொலி
நமக்கு மட்டும்
அதில்
மூங்கில்காடுகளின்  
சோக கீதமாக  
கேட்கிறதே...”
                                      -   இசாக்           
       (மௌனங்களின் நிழல்குடை)

Monday 23 June 2014

படித்ததில் பிடித்தவை (கவிதை)

கடவுளாக இருந்தால் என்ன?

“கடவுள் டை கட்டுகிறார்
நிற்கவில்லை.

கடவுள் கவிதை எழுதுகிறார்
பத்திரிக்கைகள் திருப்பி அனுப்புகின்றன.

கடவுள் கிரிக்கெட் ஆடுகிறார்
முதல் பந்தில்
விக்கெட்டை இழக்கிறார்.

கடவுள் ஷேர் வாங்குகிறார்
இறங்கி விடுகிறது.

கடவுள் தண்ணிர்க் குழாயைத் திறக்கிறார்
காற்றுதான் வருகிறது.

கடவுள் டாஸ்மாக் செல்கிறார்
ஐந்து ரூபாய் ஏற்றியே வசூலிக்கிறார்கள்.

கடவுள் கோயில் செல்கிறார்
வரிசையில் வரச் சொல்கிறார்கள்.
                                            
                                               -  க. ஜானகிராமன்.

Sunday 22 June 2014

இடம்


“பேருந்திலோ,
ரயிலிலோ
பயணிக்கையில்...

அடுத்தவர்கள்
நமது இருக்கையின் 
பின்புறம்
கையை வைத்து
ஆக்கிரமிக்கும் போது...

அதுவரை சௌகரியமாக
உட்கார்ந்திருந்த நாம்
வீறுக்கொண்டு
நிமிர்ந்து உட்கார்ந்து
கால்களை பரப்பி
நமது இடத்தை
முழுவதுமாக
கைப்பற்ற
முயற்சிக்கிறோம்...

அவர்கள் பழைய நிலைக்கு
திரும்பும் வரை..!”
          -  K. அற்புதராஜு.

Saturday 21 June 2014

படித்ததில் பிடித்தவை (கவிதை)


ரகசியம்

“உனக்கும்
எனக்கும்
ஆயிரம் இருக்கும்.
அவற்றை
சொல்லிக்கொள்ளாதவரை
சுகங்களாய் நகரும்
பந்தம்.

உன்
உண்மை நடத்தையில்
உருகிப்போய்
என்றாவது
ஒரு நாள்
உடைந்து போகலாம்
என் ஆழங்கள்.

என் வேசமற்ற செய்கையில்
வெட்கிப் போய்
விருட்டென
எழுந்து நிற்கலாம்
நீ புதைத்தவைகள்.

அப்படி
ஒரு நிகழ்வு
இருவருக்கும்
நேரிடினும்
சொல்லாமல்
தவிர்த்துக்கொள்வோம்.

காக்கைக் கூட்டில்
குயில் முட்டையாய்
அடைகாக்கப்படும்
நம்
உறவில்
நீ புதைத்தவைகளையும்...
என் ஆழங்களையும்...”

-  நெப்போலியன், சிங்கப்பூர்.

Friday 20 June 2014

படித்ததில் பிடித்தவை (கவிதை)


நிறைவு

“என்னுடைய நூற்றைம்பது காட்டுகிற
அதே நேரத்தை காட்டினாலும்
உன்னுடையது
ஏழாயிரத்து எழுநூறு.

காரில் போவதற்கு
மூவாயிரத்துக்கு நீயும்
காலில் போவதற்கு அறுபதுக்கு
நானும்
காலணிகள் வாங்கினோம்
எனக்கான கடைகளில் நீ
நுழைவதில்லை
உன் கிரெடிட் கார்டு நுழையும்
கடைகளில்
நான் நுழைய முடிவதில்லை.

இருந்தும்கூட மெத்தையிலிருந்து
அதிகாலை குதித்து
கோரைப்பாயில் உறங்கும் என்னை
தட்டியெழுப்பி சொல்கிறாய்
தூக்கம் வரவில்லையென்று..!”


                        - ஜெயபாஸ்கரன்.

Thursday 19 June 2014

படித்ததில் பிடித்தவை (கவிதை)


புரியாத வார்த்தைகள்...

“பந்த், ஸ்ட்ரைக்,
காதல் தோல்வி,
கற்பழிப்பு,
ஹோமோசெக்ஸ்,
தீக்குளிப்பு,
கள்ளத்தொடர்பு,
இவையெல்லாம் என்னவென்று கேட்டான்
ஒரு ஆதிவாசி,
எழுதப்படிக்கக் கற்றுக்கொடுத்து
செய்தித்தாள் வாசிக்கச் சொன்னபோது..!”

                                                                           
                                                                 -    துறையூர் மணி.