*பரமேஸ்வரியின்
வாழ்க்கைக் குறிப்புகள்*
“குருமூர்த்தியின்
மகளாய் பிறந்தாள்
பரமேஸ்வரி.
செல்ல மகளாய் வளர்ந்தாள்.
தந்தை மறைந்ததும்
பதினெட்டு வயதானபோதவள்
தனபாலனின் தங்கை.
புகுந்த வீட்டில் எப்போதுமே
மணிகண்டனின் மனைவிதான்.
பிள்ளைப்பேறு அவளைக்
குமாரின் அம்மாவாக்கியது.
கடந்த வாரம் பின்னிரவொன்றில்
தன் எண்பத்து மூன்றாம்
வயதில்
மரித்துப் போனாள் சதீஷின்
பாட்டியாக...
பரமேஸ்வரி ஒருபோதும்
பரமேஸ்வரியாய்
அறியப்பட்டதாக
அவளின் வாழ்க்கைக் குறிப்புகளில்
தடயங்களேதுமில்லை..!”
*பொம்பூர் குமரேசன்*
கவிதை அருமை.
ReplyDeleteகவிதை மிக அருமை.
ReplyDeleteபெண்மை எப்போதுமே
ReplyDeleteபன்முகங்கள் கொண்ட
பிரமிக்க தக்க சக்தி தான்.
இவை ஆண்களின் உலகத்தின் அடையாளங்கள். பெண்களின் உலகம் வேறு. அது அவர்களின் உறவுகளால் கட்டமைக்கப் பட்டது. அடையாளங்கள் பெண்களைக் கொண்டு அமையும். அந்த உலகில் ஆண்கள் இவ்வாறே பெண்களின் உறவுகளாக அறியப்படுவார்கள்.
ReplyDelete