*கற்றுத் தருகிறாள்...*
“பக்கத்து இருக்கை
பயணியிடம்
புன்னகை
கூட
செய்யாமல்
நீள்கிறது
பயணம்...
தூரத்து
வயல்வெளிச்
சிறுமி
கையசைத்து
கற்றுத்
தருகிறாள்
அன்பை..!”
*கண்மணி ராசா*
*கற்றுத் தருகிறாள்...*
“பக்கத்து இருக்கை
பயணியிடம்
புன்னகை
கூட
செய்யாமல்
நீள்கிறது
பயணம்...
தூரத்து
வயல்வெளிச்
சிறுமி
கையசைத்து
கற்றுத்
தருகிறாள்
அன்பை..!”
*கண்மணி ராசா*
“மழையில் நனைந்து போகிறவரை
காரில்
அமர்ந்திருப்பவர்
படம்
எடுக்கிறார்.
நனையும்
முதுமை என்று
தலைப்பிட்டு
அதை
இன்ஸ்டாகிராமில் போடுகிறார்.
மனம்
எதையோ
குத்திக்
கேட்க
நனைந்து
போகிறவர்
அருகில் போய்
காரை
நிறுத்துகிறார்.
அவரை
ஏறிக்கொள்ளச்சொல்கிறார்.
கார்
நனைந்துவிடும் என்று
அவர்
தயக்கம் காட்டுகிறார்.
இதழ்கள்
விரிய
ஏற்கனவே
கார் நனைந்துகொண்டுதான்
இருக்கிறது
எனச்சொல்லி
அவரை
ஏற வைக்கிறார்.
கார்
வைப்பரின் சத்தம்
மழையின்
இசைபோல் கேட்கிறது.
பெரியவர்
வீடு நெருங்குகிறது.
அவரை
இறக்கிவிடும்போது
அவர்
கண்களில் இருக்கும்
துளிகளைப்
பார்க்கிறார்.
பெரியவர்
நன்றி சொல்கிறார்.
கைகளைப்பற்றி
அதைப்பெற்றுக்கொள்கிறார்.
அவரோடு
ஒரு செல்ஃபி எடுத்துக்கொள்கிறார்.
பெரியவர்
வேகமாய் வீடு நோக்கிப்போக
சற்றுமுன்
போட்ட
போஸ்ட்டை
டெலிட் செய்கிறார்.
புதிய
படத்தைப்போட்டு
அதற்கு
ஒரு தலைப்பிடுகிறார்
மழையும்
நட்பும்..!”
*ராஜா சந்திரசேகர்*
*வண்ணத்துப்பூச்சியைப் பிடிப்பதற்கு…*
“வண்ணத்துப்பூச்சியின்
பின்னாலேயே
அலைவது
பிடிப்பதற்காக
அல்ல…
பிடிப்பது
போன்ற
விளையாட்டுக்காக..!”
*கல்யாண்ஜி*
*எவ்வளவு நன்றாக இருக்கும்..!*
“உங்களுக்குச் சேர
வேண்டியதை
என்னிடமும்,
எனக்குச்
சேர வேண்டியதை
அவர்களிடமும்,
அவர்களுக்குரியதை
இவளிடமுமாக
மாற்றி மாற்றிக் கொடுத்துக்
கொண்டே
செல்கிற
இந்த வாழ்க்கையில்
அவரவர்களுக்குரியதை
அவரவர்களிடம்
சேர்த்து விட முடிந்தால்
எவ்வளவு
நன்றாக இருக்கும்..!”
*கல்யாண்ஜி*