*கருணை*
“பேருந்து
வாசலில்
புரையோடிய கண்ணும்
கையில் குழந்தையுமாக
அழுக்குப் பெண்ணுருவம்
கை நீட்ட
சட்டைப்பை துழாவி
இரண்டு ருபாய் நாணயமிட்டேன்.
தடி ஊன்றி
தள்ளாடிய பெரியவர் ஒருவரின்
கை நீட்டலுக்கு
ஒரு ருபாய் இட்டேன்.
காத்திருப்பின் நீட்சியில்
‘அண்ணா...’ என
ஒரு சிறுமி கையேந்தியபோது
என் சட்டைப்பையில்
கருணை தீர்ந்து
ரூபாய்த்தாள்களே
மிஞ்சியிருந்தன..!”
*மு.மகுடீசுவரன்*
#ஆசிரியர் குறிப்பு#
ReplyDelete*மு.மகுடீசுவரன்*
ஆண் கவிஞர்.
பிறந்த நாள் : 27.11.1981.
சொந்த ஊர் : ஒட்டன்சத்திரம்.
தற்போது வசிப்பது :
உடுமலைப்பேட்டை.
பள்ளிப் படிப்பு :
விவேகானந்தா வித்யாலயா,
பழனி (1997).
கல்லூரி : விவேகானந்தா
கல்லூரி, சோளவந்தான்,
மதுரை (2002).
வேலை : ஆசிரியராக
பள்ளபாளையம், PUM
பள்ளியில் பணிபுரிகிறார்.
கவிஞருக்கு பாராட்டுக்கள்.
ReplyDeleteகவிதை அருமை.
கவிதை அருமை.
ReplyDeleteமிக அருமை.
ReplyDeleteகவிதை மிக அருமை.
ReplyDeleteகவிஞருக்கு பாராட்டுக்கள்.
அருமை
ReplyDelete