இந்தக் கவிதையைப் படித்தவுடன் எனக்கு ஒரு நிகழ்வு நினைவிற்கு வந்தது.
1981 ம் வருடம் நீலகிரியில் எமரால்டில் பணி புரிந்த காலம்.
ஒவ்வொரு ஞாயிறன்றும் நண்பர்களோடு ஊட்டிக்கு செல்வது வழக்கம்.
அன்றைக்கு ஒரு திரைப்படம் நகர் உலா இரவு உணவிற்காக சிக்கன் வாங்கிச் செல்லுதல் என்று பொழுது போகும்.
அப்போதெல்லாம் கோடை சீசன் தவிர மற்ற நாட்களில் ஊட்டியில் மக்கள் நடமாட்டம் குறைவு தான்.
தொடர்ந்து ஞாயிறன்று சென்று வந்ததால் பார்த்த முகங்களையே மீண்டும் காண நேரிடும்.
அது போன்ற ஒரு நாளில் ஒரு கடையில் சில பொருட்கள் வாங்கினேன். கடைக்காரர் மீதிச் சில்லறையில் ஒரு நூறு ரூபாய் அதிகமாகத் தந்து விட்டார். எண்ணிப் பார்க்கையில் அதிகமெனத் தெரிந்ததும் அந்தக் கடைக்காரரிடம் விவரம் தெரிவித்து அதை திருப்பித் தந்தேன்.
சாதாரண நிகழ்வுதான்.
அதுவரை அருகிலிருந்து அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு ஆங்கிலோ- இந்தியப் பெண்மணி சட்டென்று எனப் பார்த்து You ara a honest man என்று சொல்லிச் சென்றார்.
அந்த நாள் இன்றும் மறவாமல் நினைவில் உள்ளது.
பல நேரங்களில் நேர்மையாக இருப்பது சுமையோ என்று தோன்றிய போதெல்லாம் அந்த நாள் எனை நிலை தடுமாறாமல் இருக்கச் செய்தது....
வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் இது போன்று சில நாட்கள் இருக்கக் கூடும்..
இக் கவிதை அத்தகைய நாட்களை மீண்டும் மனதில் நிழலாடச் செய்கிறது.....
கவிதை மிக அருமை.
ReplyDeleteகவிதை அருமை.
ReplyDeleteகவிஞருக்கு பாராட்டுகள்.
மிக அருமை.
ReplyDeleteகவிதை அருமை.
ReplyDeleteமிகவும் அருமை.
ReplyDeleteஇந்தக் கவிதையைப்
Deleteபடித்தவுடன்
எனக்கு ஒரு நிகழ்வு
நினைவிற்கு
வந்தது.
1981 ம் வருடம்
நீலகிரியில்
எமரால்டில்
பணி புரிந்த காலம்.
ஒவ்வொரு ஞாயிறன்றும்
நண்பர்களோடு
ஊட்டிக்கு செல்வது
வழக்கம்.
அன்றைக்கு
ஒரு திரைப்படம்
நகர் உலா
இரவு உணவிற்காக
சிக்கன் வாங்கிச்
செல்லுதல்
என்று பொழுது போகும்.
அப்போதெல்லாம்
கோடை சீசன்
தவிர மற்ற
நாட்களில்
ஊட்டியில்
மக்கள் நடமாட்டம்
குறைவு தான்.
தொடர்ந்து
ஞாயிறன்று
சென்று வந்ததால்
பார்த்த முகங்களையே
மீண்டும் காண
நேரிடும்.
அது போன்ற
ஒரு நாளில்
ஒரு கடையில்
சில பொருட்கள்
வாங்கினேன்.
கடைக்காரர்
மீதிச் சில்லறையில்
ஒரு நூறு ரூபாய்
அதிகமாகத்
தந்து விட்டார்.
எண்ணிப் பார்க்கையில்
அதிகமெனத்
தெரிந்ததும்
அந்தக் கடைக்காரரிடம்
விவரம் தெரிவித்து
அதை திருப்பித்
தந்தேன்.
சாதாரண நிகழ்வுதான்.
அதுவரை
அருகிலிருந்து
அதைப்
பார்த்துக்
கொண்டிருந்த
ஒரு ஆங்கிலோ- இந்தியப்
பெண்மணி
சட்டென்று
எனப் பார்த்து
You ara a honest man
என்று சொல்லிச்
சென்றார்.
அந்த நாள்
இன்றும் மறவாமல்
நினைவில்
உள்ளது.
பல நேரங்களில்
நேர்மையாக
இருப்பது சுமையோ
என்று தோன்றிய
போதெல்லாம்
அந்த நாள்
எனை நிலை
தடுமாறாமல் இருக்கச் செய்தது....
வாழ்க்கையில்
ஒவ்வொருவருக்கும்
இது போன்று
சில நாட்கள்
இருக்கக் கூடும்..
இக் கவிதை
அத்தகைய
நாட்களை
மீண்டும் மனதில்
நிழலாடச் செய்கிறது.....