*ஞானசேகரனை
கொத்தித் தின்னும் ஞானசேகரன்*
“ஞானசேகரன்
செத்து
பதினாறாம் நாள் காரியத்தில்
படையலிட்டிருந்தார்கள்.
அவனே காகமாகி வந்து
முதல் பருக்கையை
தின்றால்தான்
தின்பதாக காத்திருந்தோம்.
உச்சந்தலையில் அடிபட்டு
புண்ணோடு வந்த காகம்
முதல் பருக்கையைக் கொத்த
ஞானசேகரனே வந்து விட்டானென
கண்ணீர் கோர்க்க
சிலாகித்தனர்.
விபத்தில் அடிபட்டு
இறந்து போனவனின்
உடல்திசுக்களை
தார்ச்சாலையில்
இதே காகம்
கொத்திக் கொண்டிருந்ததைப்
பார்த்திருந்தேன்..!”
*இரா.பூபாலன்*