*காணக்
கிடைக்காத நிழல்*
“அப்பத்தா
இறந்த ஏழாம் நாள்
பந்தல் பிரித்த இரவில்
துக்கம் விசாரிக்க
வீடு வந்திருந்த பெரியவர்
எங்களில் யாருக்கும்
அறிமுகமில்லாதவர்.
தகவல் தாமதமாகக் கிடைத்ததாக
வருந்தியவர்
அப்பத்தாவின் பூர்வீகம்
குறித்து
நாங்கள் அறியாத செய்திகளைப்
பகிர்ந்தார்.
பழைய நினைவுகளில் மூழ்கிக்
கண்ணீரோடு கொஞ்ச நேரம்
பொட்டாட்டம்
அமர்ந்திருந்தவர்,
தன் வயது நண்பர்களில்
அவர் மட்டும்
மிஞ்சியிருப்பதாகச் சொன்னார்.
பின் கனத்த நெஞ்சோடு
எழுந்தவர்
என்ன நினைத்தாரோ
சற்றே திரும்பி வீட்டுக்குள்
எட்டிப்பார்த்து
மாடத்தில் ஏற்றியிருந்த
தீபத்தை
வணங்கி விடைபெற்று நடந்தார்
காணக் கிடைக்காத
கடவுளின் நிழல்போல..!”
*மு.மகுடீசுவரன்*
#ஆசிரியர் குறிப்பு#
ReplyDelete*மு.மகுடீசுவரன்*
ஆண் கவிஞர்.
பிறந்த நாள் : 27.11.1981.
சொந்த ஊர் : ஒட்டன்சத்திரம்.
தற்போது வசிப்பது :
உடுமலைப்பேட்டை.
பள்ளிப் படிப்பு :
விவேகானந்தா வித்யாலயா,
பழனி (1997).
கல்லூரி : விவேகானந்தா
கல்லூரி, சோளவந்தான்,
மதுரை (2002).
வேலை : ஆசிரியராக
பள்ளபாளையம், PUM
பள்ளியில் பணிபுரிகிறார்.
காணக் கிடைக்காத கடவுளின் நிழல்
ReplyDeleteபோல ...எப்படி தான் எழுதறாங்க...
Very nice Sir.
வயதானவர்களை வாழவைத்துக்
ReplyDeleteகொண்டிருப்பது பழைய
நினைவுகள் என்னும்
பொக்கிஷங்களே!
பழைய நினைவுகளுக்கு
பெரியவர் மரியாதை செய்ததை
கவிஞர் கவிதையில்
வெளிப்படுத்திய அழகு
நெஞ்சைக் கவர்ந்தது.
கவிதை அருமை.
ReplyDeleteகவிஞருக்கு பாராட்டுகள்.
நினைவுகளுக்கு நன்றி.
ReplyDelete