“நேற்று அலுவலகம் முடிந்து
வீடு திரும்பும் போது
மின்சார ரயிலின்
மின்விசிறிக்கும்
மேல்கூரைக்கும் இடையே
அரை மணி நேரத்தில்
தான் தங்குவதற்கு
வலைப் பின்னி விட்டது
சிலந்தி..!
இன்று வாட்ஸ் ஆப்
வீடியோவில் பார்த்தேன்...
தனது இணையுடன்
தங்குவதற்கு தானே
அழகாகக் கூடு
கட்டிக் கொள்கிறது
தூக்கணாங்குருவி..!
சற்றே சங்கடப்படுத்துகிறது...
இரண்டு மாதமாக தினமும்
ஏழு, எட்டுப்பேர் வேலை
செய்துக்கொண்டிருப்பது
எனது குடும்பத்துக்காக
நான் கட்டும் வீட்டுக்கு..!”
- கி. அற்புதராஜு.