மற்றும் சில ஆடுகள்
"காற்று ஒருபோதும் ஆடாத
மரத்தை பார்த்ததில்லை.
காற்றில்
அலைக்கழியும்
வண்ணத்துப்பூச்சிகள், காலில்
காட்டைத்
தூக்கிக் கொண்டு அலைகின்றன.
வெட்ட வெளியில்
ஆட்டிடையன்
ஒருவன்
மேய்த்துக்
கொண்டிருக்கிறான்
தூரத்து மேகங்களை
சாலை வாகனங்களை
மற்றும் சில
ஆடுகளை.”
- தேவதச்சன்.
(வண்ணத்துப் பூச்சிகள்
இயற்கையின் மிகப் பெரிய வரங்கள் அவைகளால் காடுகள் மரங்கள் உருவாகும் ஆதாரமான
மகரந்தச் சேர்க்கை நிகழ்கிறது. இயற்கையுடன் ஒன்றிய ஒருவனாக இருக்கும் இடையன் ஆடுகளை
மட்டும் மேய்க்கும் காட்சியாக அவனைக் குறுக்க முடியாது. அவன் அந்தச் சூழலையே
மேய்ப்பவனாகிறான்.
- சத்யானந்தன்)
- சத்யானந்தன்)