*என்
அந்தரங்கம்*
“என்
அந்தரங்கம் என்று
சில உண்டு.
பெரிதாக ஒன்றுமில்லை.
நான் இடறி விழும்போது
நீங்கள் அதைக் காணக்கூடாது.
நான் உறக்கத்தில்
தேம்புதலுடன் அழைக்கும்
பெயரை
நீங்கள் கேட்கக்கூடாது.
என் அந்தரங்கமென்பது
என்னிடமிருந்து
நானே மறைத்துக்கொள்ளும்
ஒரு அவமானம்...
என்னை நானே தேற்றிக்கொள்ளும்
நூறு சின்னஞ்சிறு துயரங்கள்..!”
Nice
ReplyDelete