எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday, 8 November 2020

படித்ததில் பிடித்தவை (“பென்சில்” – தேவதச்சன் கவிதை)

 
























*பென்சில்*

 

பென்சில் சீவுவது என்றால் எனக்கு

ரொம்பப் பிடிக்கும்.

 

அதைக் கையில் எடுக்கும் போது நானும்

அதைப் போல்

எடையற்றவன் ஆகிவிடுகிறேன்.

 

ஒரு சிறுதாளில்

அவ்வளவு பேச்சு பேசும் முன்னால்

எவ்வளவு மெளனமாய் இருக்கிறது

இந்தப் பென்சில்..!

 

*தேவதச்சன்*

No comments:

Post a Comment