*3 கி.மீ.*
“அந்த
ஊருக்கு
இந்த வழியே
3 கி.மீ. எனக் காட்டிக் கொண்டு
நிற்கும்
கைகாட்டி மரத்திற்கு
அவ்வூரைப் பார்க்கும்
ஆசை வந்துவிட்டது ஒருநாள்..!
வாஞ்சை கொண்டு
கிளம்பிய மரம்
நடையாய்
நடந்து கொண்டிருக்க…
3 கி.மீ. 3 கி்.மீ. எனத்
தன்னை பின்னோக்கி
இழுத்துக் கொள்கிறது
அவ்வூர்..!”
*இசை (எ) ஆ.சத்யமூர்த்தி*
நுணுக்கமான கவிதை.
ReplyDeleteGood imagination.
ReplyDelete