எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday, 15 November 2020

*தீர்ப்பு*

 


வங்கியின்

மேலாளரை பார்க்க

காத்திருக்கும் நான்.

ஈரமாக இருந்த

குடையை இருக்கையின்

கீழே சார்த்தி வைக்கிறேன்.

 

மேலாளரை சந்திக்கும்

அழைப்பு வந்தவுடன்

ஈரக்குடையை அங்கேயே

விட்டு செல்கிறேன்.

 

திரும்புகையில்

என் இடத்தில்

ஒரு வயதான அம்மா.

 

நான் குடையை

எடுப்பதை தடுத்த

அந்த அம்மா

தனது கைப்பையில்

குடையிருப்பதை

உறுதிசெய்ததும்

சொன்ன மன்னிப்பில்

நான் திருடனில்லை

என தீர்ப்பாகிறது..!”

 

*கி.அற்புதராஜு*.

2 comments: