*அற்புதம்*
“பாத்தி கட்டி
உரமிட்டு
நீர் பாய்ச்சி
நீ வளர்த்திருக்கும்
ரோஜாக்கூட்டத்திலிருந்து
சற்றே விலகி
உன் மண்வெட்டியிலிருந்து தப்பி
வேலியில் ஒளிந்திருந்து
எட்டிப் பார்க்கிறது
ஒரு காட்டுச் செடியின்
அற்புத மலர்..!”
*சேயோன் யாழ்வேந்தன்*
ஒரு சுயம்பூ.
ஒரு சுயம்பூ.
ReplyDelete