எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday, 23 November 2020

படித்ததில் பிடித்தவை (“மனிதநேயம்” – மன்னார் அமுதன் கவிதை)

 

*மனிதநேயம்*

 

தூரப் பயணத்தில்

திடுக்கிட்டு உணர்கிறேன்

விபத்தை..!

 

மாடும், மனிதனும்

மாம்பழங்களுமாய்

கிடக்கிறது நெடுஞ்சாலை..!

 

உச்சுக் கொட்டியவர்கள்

ஓடிப் போய்

அள்ளிக் கொண்டனர்

மாம்பழங்களை..!

 

*மன்னார் அமுதன்*


1 comment:

  1. ஸ்ரீராம்23 November 2020 at 22:18

    மனித நேயம் அருகிப் போனதை அழகாக விளக்கும் அற்புதக் கவிதை.

    ReplyDelete