எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday, 6 September 2020

படித்ததில் பிடித்தவை (“அணியுமாம் தன்னை வியந்து” – கவிதை)


*அணியுமாம் தன்னை வியந்து*

மருந்துக்கடை மேஜை மேல்
உட்கார்ந்த குட்டிப்பாப்பா
விக்ஸ் டப்பாவைத் திறந்து
இரு கைகளிலும்
மிட்டாயை அள்ளிக்கொண்டது.

டப்பா மூடியை
பாப்பாவின் தலையில் வைத்த கடைக்காரர்,
நீதான் இனிமேல் என் விக்ஸ் டப்பா என்றார்.

மருந்து வாங்க வந்தவர்,
இந்த டப்பாவை நான்
வாங்கிக்கொள்கிறேன் என்றவுடன்...
தலையை ஆட்டி மூடியை உதறிவிட்டு
நான் விக்ஸ் டப்பா இல்லை என்றது.

நீ யார்?’ என்றதும்
மேஜை மேல் ஏறி நின்று
தன் இரட்டைக்குடுமியைத் தூக்கி
நான் தென்னை மரம் என்றது.
தென்னை மரத்திலிருந்து
விக்ஸ் மிட்டாயாய்க் கொட்டியது..!

1 comment: