எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday, 14 September 2020

படித்ததில் பிடித்தவை (“ஒரு கவிஞனின் போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்” – தஞ்சாவூர் கவிராயர் கவிதை)

 


*ஒரு கவிஞனின் போஸ்ட் மார்டம்

ரிப்போர்ட்*        

 

விபத்தில் இறந்த கவிஞனை

வெட்டிப்பார்த்த

டாக்டர் எழுதினார்

மூளை முழுவதும்

பூக்ள்..!

 

கண்குழியில்

சின்னதாய் இரண்டு வாவில்.

 

மூச்சுக்குழாயில்  ஒரு புல்லாங்குழல்.

தொண்டையில் நெருப்பை

விழுங்கிய அடையாளங்கள்.

 

நெஞ்சு நிறைய வானத்து நீலம்.

இதயத்தில் ஏராளமாய்

விதைகள்.

 

வயிறு

காலி..!

 

  *தஞ்சாவூர் கவிராயர்*

1 comment: