எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday, 12 September 2020

படித்ததில் பிடித்தவை (“சொந்தமாக விழுந்து உடைந்த கோப்பை” – முகுந்த் நாகராஜன் கவிதை)

 


*சொந்தமாக விழுந்து உடைந்த கோப்பை*

 

விளையாட்டில் 

வீட்டுப் பொருட்களை

காலம் காலமாக

உடைத்து வருகின்றனர் 

குழந்தைகள்.

 

உடைந்த சத்ததுக்கும்

ஓடி வந்து பெரியவர்கள் 

போடும் சத்தத்துக்கும்

நடுவில் இருக்கும் மவுனத்தில்

சிதறிய துண்டுகளில் இருந்து

தப்பிக்கும் வாக்கியங்களை

இயற்றுகிறார்கள்.

 

போன வாரம் 

கண்ணாடிக் கோப்பை 

ஒன்றை கை தவறி 

உடைத்த அதிமதுரா

அவள் அம்மாவுக்கு

சொந்தமா விழுந்து 

உடைஞ்சி போச்சு

என்ற வாக்கியத்தைப் 

பரிசளித்தாள்.

 

உடைந்த கோப்பை 

இருந்த இடத்தில்

அந்த வாக்கியத்தைப் 

பொருத்தி வைத்து

வருவோர் போவோரிடமெல்லாம் 

எடுத்து எடுத்துக்

காட்டிக் கொண்டிருக்கிறாள் 

அவள் அம்மா..!

 

*முகுந்த் நாகராஜன்*


1 comment: