*எடை சீட்டு*
“சிறுமியின் எடை சீட்டு
வெளிவரும் முன்னால்
ரயில் வந்துவிட்டது.
அம்மாவின் கை பிடித்து
ஏமாற்றத்துடன்
ரயில் ஏறினாள் சிறுமி.
தொண்டையில்
சிக்கிக் கொண்ட காசுடன்
வண்ணமயமாக விழித்தபடி
அவளை வழியனுப்பி வைத்தது
இயந்திரம்..!”
No comments:
Post a Comment