*ஒரே ஒரு வித்தை*
“ஒரு புறாவை
ஒரு முயலை
ஒரு பெண்ணை
மறைய வைத்த
அந்த மாயவித்தைக் கலைஞனிடம்
ஒரே ஒரு வித்தையை
கற்றுத்தரக் கேட்டேன்.
ஒரு நிராகரிப்பை
ஒரு ஏமாற்றத்தை
ஒரு துரோகத்தை
ஒரு புன்னகையால்
மறைக்கும் வித்தை
அல்லது
வாழ்நாள் முழுதும்
தொடரும் சோகத்தை
ஓரிரவுத் தூக்கத்தில்
மறக்கும் வித்தை..!”
Superb. இதுநாள் வரை அவனுக்குமே தெரியாத வித்தை அது.
ReplyDelete