*திருடன் விளையாட்டு*
ராஜா
ராணி
மந்திரி
போலீஸ்
திருடன்
சீட்டெழுதிப் போட்டு விளையாடியது
சண்டையில் முடிந்தது.
அழுதுகொண்டே ஓடிவந்த
நிலா சொன்னாள்...
“ராஜா ராணி
மந்திரி போலீஸ்
எல்லாரும் திருடன்..!”
*சேயோன் யாழ்வேந்தன்*
👌👌👌
👌👌👌
ReplyDelete