எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday, 3 September 2020

படித்ததில் பிடித்தவை (“கொஞ்சம் பழகியிருக்கலாம்” – தமிழச்சி தங்கபாண்டியன் கவிதை)



*கொஞ்சம் பழகியிருக்கலாம்*

கொஞ்சம்
பழகியிருக்கலாம்.
கோடை விடுமுறைக்கு
நீங்கள் ஊருக்குப்
போகும்போது
நான் தண்ணீர்
ஊற்றலாமா?
எனும் உரிமைக்காவது.

எவ்வளவு பெரிய
அவஸ்தை
எதிர் வீட்டு பால்கனிச்
செடிகளைப்
பார்த்துக் கொண்டு
தண்ணீர் குடிப்பது..!

*தமிழச்சி தங்கபாண்டியன்*

1 comment:

  1. செடிகளுக்காவது பழகியிருக்கலாம்.👌

    ReplyDelete