*தீண்டாமை*
“கோவில்
கட்ட
கடக்கால் தோண்டணும்
நீ வர்றயா?
நான் வாரேன்.
கோவில் கட்ட
கல் சுமக்கணும்
நீ வர்றயா?
நான் வாரேன்.
கோவிலுக்குள்
குளம் வெட்டணும்
நீ வர்றியா?
நான் வாரேன்.
கோவிலுக்கு
வண்ணம் பூசணும்
நீ வர்றயா?
நான் வாரேன்.
கோவில் குடமுழுக்கு
நான் வரட்டா?
வா…
தூர நிண்ணு பார்.
தள்ளி நின்று
சாமி கும்பிடு..!”
மிகவும் பிடித்தது
ReplyDelete