*மந்திரக்காரி..!*
“என்னை
ஒரு நாய்க்குட்டியாக
இருட்டில் உருட்டும்
திருட்டுப் பூனையாக
தலையணை மெத்தையாக
கண்ணீர்த்துளிகளை ஒற்றி
மூக்கைச் சிந்தும்
கைக்குட்டையாக
மாற்றிக்கொள்ளும்
மந்திரக்கோல்
அவளிடம் இருக்கிறது.
பிறர் காணும்போது
அவளை ஆட்டுவிக்கும்
மந்திரவாதியாகவும்
என்னை மாற்றிக்காட்டும்
மாயவித்தைக்காரி அவள்.
வார நாட்களில்
என்னை நானாக்கி
வாசல் நிலையில் சாய்ந்து
நின்று
வழியனுப்பிவைப்பாள்
மந்திரக்கோலை முதுகில்
மறைத்து..!”
*சேயோன் யாழ்வேந்தன்*
👌
ReplyDelete