*ஒரு
சாப்ட்வேர் பக்கம்*
“மீண்டும்
மனிதன்
உலகம் தட்டை என்று
சொல்லும் காலம்
வந்து விட்டது…
ஒரு படித்த கணிப்பொறி
இளைஞனின்
புவியியல் சொல்கிறது
உலகத்தின் பரப்பு 14 அங்குலம் என்று..!
இன்று மாலை
உயிர் நண்பனின்
திருமண வரவேற்பு விழா.
வழக்கம் போல் செல்ல முடியாது.
ப்ராஜெக்ட் டெட்லைன் இன்று.
ஈமெயிலில் தான் அக்ஷதை தூவ
வேண்டும்.
இரவு உணவிற்கு
காத்துக் கொண்டிருக்கும்
குடும்பம்
செல்ல முடியாது.
மீட்டிங்...
தொலைபேசியில் மனைவியை
சமாதானப்படுத்த வேண்டும்.
மனைவியின் கைபிடித்ததை விட
மௌசை பிடித்ததே அதிகம்.
பிள்ளைகளின் விரல் தொட்டு
ஸ்பரிசத்தை விட
கீ போர்டை ஸ்பரிசத்ததே
அதிகம்..!
சூரிய வெளிச்சத்தை
பார்த்து விட்டு
பொருட்களை பார்க்கையில்
கண்கள் இருண்டு விடுவதைப் போல…
கணிப்பொறித் திரையையே
பார்த்துக் கொண்டிருக்கும்
கண்கள்
குடும்பத்தை பார்க்கையில்
உறவுகள் இருண்டு
கிடக்கின்றன..!”
No comments:
Post a Comment