எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday, 10 October 2020

படித்ததில் பிடித்தவை (“வாடகை வீடு” – நெல்லை ஜெயந்தா கவிதை)

 


*வாடகை வீடு*

 

வாடகை வீட்டின்

வரவேற்பறை

பெரிதும் சிறிதுமாய்

பிகாசோ ஓவியங்கள்

வீட்டுக்காரரின்

விழிகள் மட்டும்

அகல மறுக்கின்றன

ஆணிகளை விட்டு..!

 

*நெல்லை ஜெயந்தா*


1 comment: