எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday, 13 October 2020

படித்ததில் பிடித்தவை (“என்னிடம் பெரிதாக” – முகுந்த் நாகராஜன் கவிதை)

 


*என்னிடம் பெரிதாக*

 

வாழ்க்கை எப்படிப் போகிறது?”

என்று கேட்டான்

ரொம்ப நாள் கழித்து

சாட்டில் வந்த நண்பன்.

 

முன் தினம்

சரவண பவனில்

பெரிய தோசை வேண்டும்

என்று அடம் பிடித்து வாங்கிச்

சாப்பிட முடியாமல்

முழித்துக் கொண்டிருந்த

சிறுமியைப் பற்றி சொன்னேன்.

 

அப்புறம் பார்க்கலாம் என்று

மறைந்து போனான்.

என்னிடம் பெரிதாக

எதையேனும்

எதிர்பார்க்கிறார்களோ..?

 

*முகுந்த் நாகராஜன்*


1 comment:

  1. The hidden message it conveys is to be understood. Good.

    ReplyDelete