எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 14 October 2020

படித்ததில் பிடித்தவை (“ஓர் அரிசியில் பெயர் எழுத…” – சேயோன் யாழ்வேந்தன் கவிதை)

 


*ஓர் அரிசியில் பெயர் எழுத

 

ஓர் அரிசியில் என் பெயர் எழுத

இருபது ரூபாய் கட்டணம் என்பது

ரொம்ப அநியாயமாகப் பட்டது.

 

ஒவ்வொரு அரிசியிலும்

உண்பவன் பெயர் எழுதியிருக்குமென்று

அம்மா அடிக்கடி சொல்வாள்.

ஊற வைக்கையில் பார்த்திருக்கலாம்.

வேக வைத்ததில் அழிந்திருக்கலாம்.

 

மட்டமான அரிசியில்

ஏழைகளின் பெயர்களையும்,

பாசுமதி அரிசியில்

பணக்காரன் பெயரையும்

ஆண்டவனே எழுதும்போது

நாமென்ன செய்யமுடியும் நடுவே?

 

அரசுக் கிடங்குகளில்

வீணாகும் அரிசிகளில்

புழுக்களின் பெயரை

எழுதியவன்

காருண்யமூர்த்தி..!

 

 *சேயோன் யாழ்வேந்தன்*

2 comments:

  1. Good imagination.

    ReplyDelete
  2. ஸ்ரீராம்3 November 2020 at 21:07

    தானியங்களை முறையாக சேமிக்க தெரியாததும் வேளாண் பொருள்களின் மதிப்பையும் விளைவித்த விவசாயியின் உழைப்பையும் மதிக்கத்தெரியாதது மனிதர்களின் பிழை. இதில் தெய்வத்தை குறை சொல்லி என்ன பயன்?

    ReplyDelete