*துபாய்*
“புறப்படும்
அன்று
சோக… சோகமாகக் காட்சியளிக்கிறார்கள்
வழியனுப்ப வந்தவர்களும் கூட.
பார்த்துப் பார்த்து
தேம்புகிறாள்
பெரியக்கா மகள்.
கிளம்பும்போது
அழுதுவிட்டுத்தான் போவாய்
பந்தயம் கட்டுகிறார் மாமி
தேற்றுதல் சொன்ன என்னிடம்.
நாளு வருசத்துக்குப் பிறகு
மூனு மாசம்
விடுப்புல வந்தான்
திரும்ப எப்ப வருவானோ?
அப்பாவும் கண்கலங்குகிறார்.
என்ன செய்ய
துபாய் போகாமல்
இருந்துவிட்டாலும்
மகிழ்ச்சியடையப் போவதில்லை
எவரும்..!”
*இசாக்*
உண்மை நிலை.
ReplyDeleteவாழ்வின் எதார்த்தம்.
ReplyDelete