எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday, 6 October 2020

படித்ததில் பிடித்தவை (“மான்கீபாத்” – செ.கார்கி கவிதை)

 


*மான்கீபாத்*

 

சுடுகாட்டில் நின்றுகொண்டு

இடைவிடாமல்

குரைத்துக் கொண்டே

இருக்கின்றது ஒரு நாய்.

 

அது எதற்காக குரைகின்றது

என்று சக நாய்களுக்கே

தெரியவில்லை.

 

அது குரல்வளை வீங்கும்

அளவுக்கு குரைக்கின்றது

பற்கள் உடைந்து தெறிக்கும்

வரை குரைக்கின்றது….

வால்கள் அறுந்துவிழும் வரை

குரைக்கின்றது.

 

நாய்கள் ஒரு போதும்

அறிவதில்லை

சுடுகாட்டுக்கு வரும்

பிணங்களைத் தொந்தரவு

செய்யக்கூடாது என்று.

 

ஆனாலும் பிணங்களை தின்று

ருசி கண்ட நாய்களால் தம்மை

ஒருபோதும்

கட்டுப்படுத்திக்கொள்ள

முடிவதில்லை.

 

நம்மால் அந்த நாயை

என்னதான் செய்துவிட முடியும்?

ஒரு டிஸ்லைக் செய்வதைத்

தவிர..!

 

*செ.கார்கி *

{மின் இலக்கியப் பூங்கா – புலனம் (WhatsApp) பதிவிலிருந்து}

1 comment:

  1. அரசின் கொடுங்குரலை விரும்பாத மக்களால் என்ன தான் செய்து விட முடியும்?

    Go Back பதாகை காட்ட முடியும்.

    வீட்டுக்கு வெளியே நின்று கருப்புக் கொடி காட்டிட முடியும்.

    அரசின் அலங்கோல சட்டங்களை வாசலில் கோலமிட்டு எதிர்ப்பைக் காட்டமுடியும்.

    அதுக்கு மேலே என்ன பண்ண முடியும்.

    Dislike போட முடியும்.

    ஆனால் காற்றில் அந்த குரல் பரப்பும் தேன் தடவிய விசவிதைகளின் பச்சை மணத்தை நுகராமலிருக்க முடியாது.
    ஒன்று நிகழந்தால் மட்டுமே நாம் இதை தவிர்ப்பது சாத்தியம். அதற்கு தமிழ்மண் மட்டுமல்ல.
    இந்தியமண்ணே பெரியார் மண்ணாக வேண்டும் தோழமைகளே.
    அதன் வெளிப்பாடே இந்த கவிதை.

    - திரு. சக்கையா.
    (மின் இலக்கியப் பூங்கா – புலனம் பதிவு)

    ReplyDelete